திருப்புத்துார்: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஜூலை 31 ல் திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. ஆக.,2 காலை 9:27 மணிக்கு சிம்மத்தில் இருந்துகன்னி ராசிக்கு குருபகவான் இடம்பெயர்கிறார். இதையொட்டி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் ஜூலை 31 காலை 9 மணிக்கு சிறப்பு யாகம் நடக்கிறது. பகல் 12:30 மணிக்கு யாகம் நிறைவடையும். யாகத்திலிருந்து கலசங்கள் புறப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். ஆக.,1 ல் மூலவர், உற்சவருக்கு தீபாராதனை நடக்கும். ஆக. 2 ல் காலை 9: 27 மணிக்கு குருபெயர்ச்சியானவுடன், மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடக்கும். ஏற்பாடுகளை வீரப்பச்செட்டியார் செய்கிறார். அவர் கூறுகையில், “சிறப்பு யாகத்தில் பங்கு பெறும் பக்தர்கள் ஹோமப் பொருட்களை வழங்கலாம். சிறப்பு தரிசனத்திற்கு தனி வழி கிடையாது. அனைவரும் ஒரே வழியில் தான் செல்ல வேண்டும்,” என்றார்.