பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
02:07
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, நேற்று, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், அம்பாள் தரிசனம் செய்தார். முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள அவர், அடிக்கடி பல கோவில்களுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்வார். திருவான்மியூரில் உள்ள, பாம்பன் சுவாமி கோவிலுக்கும் அடிக்கடி செல்வது வழக்கம். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, காலை 6:00 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள மருந்தீசுவரர் கோவிலுக்கு சென்றார். அங்கு திரிபுரசுந்தரி அம்பாளுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பங்கேற்றார். சுவாமி தரிசனம் முடிந்ததும், அவருக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. பின், பக்தர்களுக்கு சசிகலா, கோவில் பிரசாதமாக கேசரி வழங்கினார்.