பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
நெல்லிக்குப்பம்: வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆடிப்பெரு விழா சிறப்பாக நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், இந்தாண்டுக்கான ஆடிப்பெருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சனிக்கிழமை, மாலை முதல் கால பூஜையுடன் ஆரம்பமான, இவ்விழா, நேற்று காலை, இரண்டாம் கால பூஜையும், பின், மூலவர் அம்மனுக்கு, 108 சங்கு அபிஷேகமும், பின்னர், பக்தர்களின் பால் குட புறப்பாடும் நடைபெற்றது. பின் பக்தர்கள் சுமந்து வந்த, பாலினால், உற்சவர் அம்மனுக்கு, மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏந்தியும், தங்கள் வேண்டுதலை, நிறைவேற்றினர்.