பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
புரசைவாக்கம்:ராமரின் வாழ்க்கை முறையை, தத்ரூபமாக விளக்கும், ஸ்ரீராம் லீலா மஹோத்சவ் என்னும் இந்தி நாடகம், நேற்றுடன் நிறைவடைந்தது. ராமரின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலமாக, நல்லொழுக்கத்தை சமூகத்தில் விதைக்கும் நோக்குடன், ஸ்ரீராம் லீலா மஹோத்சவ் என்ற பெயரில், இந்தி நாடகத்தை, சந்தோஷ்குமார் டுபேய் மற்றும் குழுவினர் நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். கடந்த, 15ம் தேதி, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கத்தில் துவங்கிய, இந்த நாடகம், நேற்றுடன் முடிவடைந்தது. ராமரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வான, நாரதருக்கு கல்யாண ஆசை வருவது; ராமர் அவதாரம் எடுத்ததற்கான காரணங்கள்; சீதாவை திருமணம் செய்வது; சீதாவை ராவணன் கடத்தி செல்வது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கடைசி நாளான நேற்று, ராமர் ராஜ அபிஷேகம் நிகழ்வு நடித்துக் காட்டப்பட்டது. சென்னையில் உள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், அடுத்த ஆண்டில், தமிழ் மொழியில் இந்த நாடகத்தை நிகழ்த்தவுள்ளதாக, நாடகத்துக்கு ஏற்பாடு செய்துள்ள நிர்வாகிகள் தெரிவித்தனர்.