காரைக்காலில் விநாயகர் சிலை தாயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2016 12:07
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. காரைக்காலில் பல இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்கால் வேகமாக நடந்து வருகிறது. நிரவியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்தில் பேப்பர், கிழங்குமாவு கூழ் கொண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு இறுதியாக வர்ணம் பூசப்படுகிறது. சிலைகள் 3 அடி முதல் 12 அடி வரை தயாரிக்கப்படுகிறது.சிங்க வாகனம், மூஞ்சுரு, ரிஷப வாகனம், சிவலிங்கத்தின் மீது விநாயகர் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு இறுதியாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சிலைகள் நாகை, திருவாரூர், வேதாரண்யம், திருப்பூண்டி, சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.