பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
பவானி: லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பவானி, ஜம்பை கிராமம், பெரியவடமலைபாளையத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 22ம் தேதி, விஷ்வக்ஸேனர் ஆராதனை, லட்சார்ச்சணை தொடங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் நேற்று காலை, 8 மணிக்கு கலச ஸ்தாபனம், தன்வந்திரி ஹோமம், மஹா தீபாராதனை நடந்தது. மாலை, 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.