பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
04:07
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று(ஜூலை 28) காலை 9.30 மணிக்கு கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பூஜைகளுக்கு பின் ஆண்டாள்-, ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், இரவில் பதினாறு வண்டி சப்பரத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. ஆக.,1ல் ஐந்து கருடசேவை, ஆக.,3ல் சயன திருக்கோலம், ஆக.,5ல் தேரோட்டம், ஆக.,8ல் புஷ்பயாகம் நடக்கிறது. தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், வீதி உலா நடக்கும். ஆடிப்பூர பந்தலில் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக, இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.