விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா பிரதோஷத்தன்று, ருத்ராபிஷேகம் நடக்கிறது. கோவிலில், வரும் 31ம் தேதி மகா பிரதோஷம் நடக்கிறது. அதையொட்டி, காலை 7:00 மணி முதல் 2:00 மணி வரை 15 வேத விற்பன்னர்கள் ஜபம் செய்கின்றனர். 2:30 மணிக்கு ஹோமம் செய்து, பிரதோஷ வேளையில் பூர்ணாகுதி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.