குன்னுார் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2016 12:07
குன்னுார்: குன்னுார் கோவில்களில் ஆடி கிருத்திகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் வி.பி., தெரு பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. அருவங்காடு பகுதியில் உள்ள சித்தி வினாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது, பாலமுருகன் கோவில் பகுதியில் துவங்கிய ஊர்வலம் விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மகாதீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. இதேபோல வெலிங்டன் முருகன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் ஆடி கார்த்திகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.