திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இன்று நடைபெறும், திருவாசகம் முற்றோதல் விழாவிற்காக, பட்டினத்தார் கோவிலில் இருந்து வடிவுடைய ம்மன் கோவிலுக்கு திருவாசகம், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவி லில், இன்று காலை 6:00 மணிக்கு திருவாசகம் முற்றோதல் விழா நடக்கிறது. அதற்காக, நேற்று முன் தினம் மாலை, பட்டினத்தார் கோவிலில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருவாசக புத்தகங்களை தலையில் சுமர்ந்தவாறு திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெரு மற்றும் நான்கு மாடவீதிகளை சுற்றி கோவிலுக்குள் கொண்டு சென்றனர். கோவில் வளாகத்தில் அமர்ந்து திருவாசகம் பாடப்படும் நிகழ்ச்சி, இன்று காலை 6:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.