மரக்காணம்: மரக்காணம் அடுத்த முருக்கேரியில் உள்ள ஸ்ரீவேங்கடத்தம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த மாதம் 24ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 31ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பூங்கரகம் வீதியுலாவும் நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீவேங்கடத்தம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். 9.00 மணிக்கு கோவிலில் இருந்து மெயின் ரோடு வழியாக பக்தர்கள், வடம்பிடித்து தேர் இழுத்தனர். மாலை 3:00 மணிக்கு பெண்கள் கோவில் வளாகத்தில், ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து தீமிதி திருவிழா நடந்தது.