பதிவு செய்த நாள்
02
ஆக
2016
01:08
தாம்பரம்: தாம்பரம் அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. மேற்கு தாம்பரம், முத்து ரங்கம் பூங்கா வளாகத்தின் உள்ளே, ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின், ஆடி திருவிழா மற்றும் பிரம்மோற்சவம், நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் இறுதி நாளான நேற்று, காலை, 11:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 7:00 மணிக்கு, பூ மண்டப அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.