பதிவு செய்த நாள்
04
ஆக
2016
12:08
மல்லசமுத்திரம்: கருங்கல்பட்டி கொலுஞ்சிகாடு, அண்ணமார் கோவில் முப்பூஜை திருவிழா, வரும், 19ம் தேதி நடக்கிறது. வையப்பமலை அடுத்த, கருங்கல்பட்டி கொலுஞ்சிக்காடு அண்ணமார் கோவில் முப்பூஜை திருவிழா, வரும், 19ம் தேதி நடக்கிறது. முன்னதாக, 14ம்தேதி இரவு, கணபதி ஹோமம் முடித்து, சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடக்கும். மறுநாள் காலை, பூச்சூட்டுதல், தீபாராதனை நடக்கிறது. வரும்,16ம்தேதி இரவு, முப்போடு மற்றும் படைக்களம் நடக்கிறது. வரும், 19ம் தேதி காலை, 8 மணிக்கு கன்னிமார் அழைத்தலை தொடர்ந்து மதியம் முப்பூஜையும், 20ம்தேதி, மாலை சுவாமி வீட்டு கோவிலுக்கு புறப்படுதலும், இரவு மஞ்சள் நீராட்டு விழாவும், 22ம்தேதி, மறு பூஜையும் நடக்கிறது.