மதுரையிலிருந்து ஸ்ரீவி., ஆண்டாளுக்கு வந்தது சீர்: இன்று தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2016 11:08
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை கள்ளழகர் கோயிலிருந்து, ஆண்டாளுக்கு மங்களசீர், வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஐந்து கருடசேவை, சயனதிருக்கோலம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. ஆண்டாள் மாடவீதிகள், ரதவீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
பாதுகாப்பு: 3 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கேமராக்கள் அமைத்து, 5 மாவட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பெருமாள் வஸ்திரங்கள்: நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலிருந்து, திருச்சி தினமலர் ரா.ராமசுப்பு, இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் மங்களசீர், வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டன. மாலை 6:00 மணிக்கு மதுரை கள்ளழகர் கோயிலிருந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றை இன்று ஆண்டாள் அணிந்து தேரில் எழுந்தருள்கிறார்.