பதிவு செய்த நாள்
08
ஆக
2016
02:08
புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில், ரிக் வேத பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றிக் கொண்டனர். ஆடி மாதத்தில் ரிக் வேதத்தினர், பூணுால் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆவணி மாதத்தில் ரிக் வேதத்திற்கு பரிகாரப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதன்படி, கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகர் இடையன்சாவடி ரோட்டில் உள்ள வேதாஸ்ரம குருகுலத்தில் நேற்று ரிக் வேத பிராமண சமூககத்தினர் பூணுால் மாற் றும் நிகழ்ச்சி நடந்தது. காலை 6:00 மணி முதல் 7:00 வரை, 7:30 மணி முதல் 9:00 வரை, 9:00 மணி முதல் 10:30 வரை மூன்று பிரிவாக, ராஜா சாஸ்திரிகள் தலைமையில் வேதங்கள் ஓத, பூணுால் மாற்றிக் கொண்டனர். பிராமண சமூக நல சங்கம், சாய் சங்கர பக்த சபா சார்பில், காயத்ரி ஜபம் வரும் 19ம் தேதி குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 98423 29770, 98423 27791, 98428 29770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.