Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதைச் சொல்லும் பெரியவர்கள்! வீடுகளில் உள்ள பூஜையறை இரவில் சாத்தி தான் இருக்க வேண்டுமா? வீடுகளில் உள்ள பூஜையறை இரவில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருடனின் ராமசேவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருடனின் ராமசேவை!

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
05:08

கருடனின் அவதார நாளை ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்திய பஞ்சமி என்று ஒரு சாராரும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று ஒரு சாராரும் கொண்டாடுவர். முந்தைய விழாவை கருட பஞ்சமி என்றும், ஆடி சுவாதி திருநாளை கருடாழ்வார் திருநட்சத்திரம் என்றும் அழைப்பர். தேவர்களின் தந்தையான காஷ்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்த மகனே கருடன். இவரது அண்ணன் அருணன். இவர் சூரியனின் தேரோட்டியாக பணிபுரிபவர். பகல், இரவை பிரித்துக் காட்டும் பெரும் பணி இவரிடம் உள்ளது. இந்த கருடனே ராமாயண காலத்தில் ஜடாயுவாகப் பிறந்து ராமபிரானுக்கு சேவை செய்தார். சீதையை ராவணன் கடத்திய போது, ஜடாயு அவனை வழிமறித்து போரிட்டார். பெரும் சக்தி வாய்ந்த ஜடாயுவை ராவணன் கொன்றது ஒரு தேவ ரகசியம்.

கருடனின் அண்ணன் அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு. ஒருமுறை சம்பாதிக்கும், ஜடாயுவுக்கும் இடையில் யார் உயரப் பறப்பது என்று போட்டி நடந்தது. ஆர்வத்தில் ஜடாயு சூரியன் அருகில் செல்ல, சம்பாதி தன் சிறகுகளை விரித்து, தன் தம்பியை வெப்பத்தில் இருந்து காத்தான். ஆனால் அந்த வெப்பம் சம்பாதியின் சிறகுகளை கருக்கி விட்டது. சிறகுகள் மீண்டும் முளைக்க ராமநாமம் ஜெபித்து வந்தான் சம்பாதி. அவனுக்கு சிறகுகள் மீண்டும் முளைத்தன.ஆகையால் இருவருக்கும் ராமனின் மீது தீராத பக்தி உண்டு. இந்த நன்றிக்கடனுக்காக, ராவணன் சீதையை துõக்கி செல்லும் போது, அவனை ஜடாயு தாக்கினான். அப்போது ராவணன் தன் வேலை ஜடாயு மீது வீசினான். சக்தி வாய்ந்த அந்த வேல் ஜடாயுவை ஒன்றுமே செய்யவில்லை. மேலும் ஜடாயு ராவணனின் மார்பிலும், தோள்களிலும் தன் பலம் மிக்க சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் கீழே விழுந்த ராவணன், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளைக் கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் சக்தி கொண்டது. அதனால் தான் ஜடாயு விழுந்தபோது மலை போல வீழ்ந்தான் என்பர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar