பதிவு செய்த நாள்
09
ஆக
2016
12:08
அனகாபுத்துார்:அனகாபுத்துார் ஆலவட்டம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அனகாபுத்துாரில், ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் வகையறா கோவில்களுக்கு உட்பட்ட, ஆலவட்டம்மன் கோவிலில், தீ மிதி விழா, நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, காலையில், பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல், பக்தர்கள் பிரார்த்தனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதை தொடர்ந்து, மாலை, 6.30 மணிக்கு தீ மிதித்தல், இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதி உலா, உற்சவ அபிஷேகம் ஆகிய நிகழச்சிகள் நடந்தன. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனின் அருள் பெற்றனர்.