வீராம்பட்டினம் தேரோட்டம் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2016 12:08
புதுச்சேரி: வீராம்பட்டினம் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஒவ்வோரு ஆண்டும் ஆடி மாதம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்கும். ஆனால், இந்தாண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் நான்காம் வெள்ளிக்கிழமையான 12ம் தேதி தேரோட்டம் என, கருதி விடுமுறை அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது குறித்து புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, தற்போது தேரோட்டம் நடக்கும் ஐந்தாம் வெள்ளியான 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.