பதிவு செய்த நாள்
09
ஆக
2016
12:08
ஆத்தூர்: கொத்தாம்பாடி முனீஸ்வரன் கோவிலில் நடந்த விழாவில், 500 ஆடுகள், 1,200 கோழிகள் பலியிடப்பட்டன. ஆத்தூர் அருகே, கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள முனீஸ்வரன் கோவில் உள்ளது. வாகனங்களின் பாதுகாவலனாக முனீஸ்வர சுவாமி உள்ளதால், புதிதாக, வாகனங்கள் வாங்குபவர்கள், அங்கு வந்து பூஜை செய்துவிட்டு செல்வர். அங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடக்கிறது. நேற்று நடந்த விழாவில், 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, 500 ஆடுகள், 1,200 கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.