Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகல் தூக்கத்திற்கு பை! முதுமை உங்கள் சுருக்கங்களுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குபேர வாழ்வு தரும் ஐந்துமுக சிவன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
02:08

திருவானைக்காவல் வடக்கு வீதியில் ராஜராஜேஸ்வரர் கோவில் எனப்படும் பழமையான சிவாலயம் ஒன்று இருந்தது. பல காலமாகப் பூஜை, வழிபாடு இல்லாததால் அக்கோவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இதைக் கேள்விப்பட்டு, காஞ்சி மகாபெரியவர் 1943ல் இங்கு வந்தார். புதர் சூழ்ந்த இடத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்ற அவர், உள்ளே இரண்டு சிவன் கோவில்கள் இருப்பதைக் கண்டார். அதில் ஒரு கோவிலில் நான்கு திசைக்கும் நான்கு வாசல்களும், மேலே ஒரு வாசலுமாக ஐந்து வாசல்கள் அமைந்திருந்தன. அங்கிருந்த சிவலிங்கம் வழக்கமான வடிவில் காணப்படவில்லை. நான்கு திசைக்கும் நான்கு முகங்களும், அதன் மேலே ஆகாயத்தை நோக்கிய ஊர்த்துவ முகமும் கொண்டிருந்தது. ஸ்ரீ ருத்ர மகன்யாசம் என்ற மந்திரத்தில், சிவபெருமானுக்குரிய தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்னும் ஐந்து முகங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் கிழக்கு நோக்கியது தத்புருஷம் என்ற முகம். இது சாம வேதத்தைக் குறிக்கும். தெற்கிலுள்ள அகோரம் என்ற முகம் அதர்வண வேதமாகும்.

மேற்கி நோக்கிய சத்யோஜாத முகம் ரிக் வேதமாகும். வடக்கு முகமான வாமதேவ முகம் யஜூர் வேதமாகும். ஐந்தாவது முகமான ஈசானம் அரூபமாக அதாவது கண்ணுக்குப் புலப்படாததாக இருக்கும். இந்த அமைப்பில், ஐந்து முகம் கொண்ட சிவலிங்கமும், அதைச் சுற்றிய ஐந்து வாசல்களும் கொண்ட கோவில் ஒன்று நேபாள தலைநகர் காட்மாண்டில் உள்ளது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிவன், பசுபதீஸ்வரர் என போற்றப்படுகிறார். அதைப் போலவே தமிழகத்திலும் இப்படி ஒரு கோவில் இருப்பதும், அது மகாபெரியவர் மூலமாக வெளிப்பட்டதும் கண்டு எல்லாரும் அதிசயித்தனர்.புனிதமும், பழமையும் மிக்க இந்த கோவில்களில் திருப்பணி நிறைவேற்றிய காஞ்சிப் பெரியவர், 13.6.1943ல் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். லட்சுமி கடாட்சம் தரும் குபேரனால் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் தலபுராணம் கூறுகிறது. இவரைத் தரிசிப்போருக்கு குபேரனைப் போல செல்வச் செழிப்பும், ராஜ வாழ்க்கையும் அமையும் என்பது ஐதீகம். வேறு எங்கும் தரிசிக்க முடியாத இந்த சிவலிங்கத்தையும், கோவிலையும் தரிசிக்கும் வாய்ப்பளித்த பெருமை காஞ்சிப் பெரியவரையே சேரும். (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar