Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குபேர வாழ்வு தரும் ஐந்துமுக சிவன்! மாற்றுத்திறனாளிகளே! மகிழ்ச்சி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதுமை உங்கள் சுருக்கங்களுக்கு மட்டுமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
02:08

*வயதும், காலமும் முகத்திலும் உடலிலும் வெளிப்படும் சுருக்கங்களுக்கு மட்டுமே. அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். அதில் வரப்போகும் வெற்றி, தோல்வியையும் கருத்தில் கொள்ளாதீர்கள்.
*மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்வது பெரிய விஷயமல்ல. பிடிக்காத வேலையாக இருந்தாலும், அதையும் செய்யும் மனநிலை கொண்டவனே புத்திசாலி. எதிர்காலத்தில் சிறந்த சாதனையாளர் என்னும் புகழை அவனால் மட்டுமே அடைய முடியும்.
*மனிதன் கடவுளை நாடினால் அது கடவுளுக்காகவே இருக்க வேண்டுமே தவிர, வேறு ஆசைகளுக்காக இருக்கக் கூடாது.
*ஒரு பணியை செய்து முடிக்க வேண்டும் என்பதில், நம்பிக்கை எந்த அளவிற்கு
இருக்கிறதோ அதே அளவிற்கு கடவுளின் அருளும் ஒருவனுக்குத் துணை புரியும்.
*குறிக்கோள் இல்லாத வாழ்வு மிகவும் பரிதாபகரமானது. அந்த குறிக்கோள் மனித சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில் உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், சுயநலம் சிறிதும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
*தான் சொல்வதே சரி, மற்றவர் சொல்வது தவறு என்று வலியுறுத்துவது கூடாது. பேச்சின் தொனியும், வார்த்தைகளைச் சொல்லும் விதமும் அடக்கத்தையும், அமைதியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும்.
*கடவுளுடன் தொடர்பு கொண்டு அவரது கைகளில் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட்டால், அவர் தன்னுடைய சொந்த சக்தியை நம்முள் கலக்கச் செய்து எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவார்.
*உலகம் நிலையில்லாத மாயை என்றோ, உலகமே துன்பமயம் என்று சொல்வதோ,
வாழ்விலிருந்து விலகி ஓடுவதோ ஆன்மிகம் ஆகாது. ஆன்மபலம் என்னும் அரிய சக்தியால் உலகத்தை வெற்றி பெறுவதே ஆன்மிகத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்.
*துன்பத்தையும் வருக வருக என வாழ்த்தி வரவேற்கப் பழகுங்கள். அதன் மூலமே
கடவுளின் அருள் ததும்பும் முகத்தைத் தரிசிக்கும் பேறு உண்டாகும். கடவுளுக்காகவும், உலக உயிர்களுக்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முயலுங்கள்.
*கருணையும், இனிமையும் கடவுளின் சுபாவங்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன், தெய்வ நிலைக்கு உயர்கிறான். அவனே தனக்கென உள்ளதையும் பிறருக்கு கொடுத்து மகிழ்வான்.
*பிறருடைய குற்றம், குறைகளை பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். அதனால் சிறிதும் பலன் ஏற்படாது. மனதில் நல்ல எண்ணங்களை மட்டும் விதைத்து விட்டால் மற்றவர்களின் நிறைகளை மட்டுமே காணும் எண்ணம் தானாக ஏற்பட்டு விடும்.
*நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தால், அவர் நம்மை நோக்கி நுõறு அடி வந்து விடுவார். நாம் அனைவரும் அவரது கையில் உள்ள தேர்ந்த கருவியாக இருக்கவே முயற்சிக்க வேண்டும்.
*இடையூறு என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து உண்டாவதாக கருதுவது தவறு. உண்மையில் இடையூறு அனைத்தும் நமக்குள் இருந்தே உருவாகிறது. எதைக் கொடுத்தாலும், யாருக்கு கொடுத்தாலும் அதை கடவுளுக்கே கொடுக்கிறோம் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால் எதிரி என்றே சொல்லுக்கே இடமிருக்காது.
*கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று உலகில் ஏதுமில்லை. அது போல உங்களின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.
*உத்தமச் செயல்களில் ஈடுபட நினைத்தால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடலாம். (மகான் அரவிந்தர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar