பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவத்தை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது. அதையொட்டி புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பெண்கள் குடும்ப நலனுக்காவும், திருமணம் ஆகாத பெண்கள், விரைவில் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் குத்து விளக்கு பூஜை செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகாத்தா சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.