கோட்டையூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கிடா வெட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2016 12:08
கொளத்தூர்: கோட்டையூர் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் கிடா வெட்டி வழிபாடு செய்தனர். கொளத்தூர் அடுத்த கோட்டையூர் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலை கோட்டையூர் மட்டுமின்றி சுற்றுப்பகுதி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று மதியம் பக்தர்கள் கோவில் முன், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஒரே நாளில், 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டன. இரவு, அம்மன் வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பண்டிகையை முன்னிட்டு இரு தரப்பினர் மோதலை தடுக்க கோட்டையூர் மாரியம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்ப போடப்பட்டிருந்தது.