புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடிப் பெருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட செங்கழுநீரம்மன் தேரில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.