மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில், 36ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேவி மாரியம்மன் கோவிலில் கடந்த 8ம்தேதி, கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் அம்மன் பள்ளிகொண்டபெருமாள் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.