“நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய், என்கிறது பைபிள். காரணம் என்ன? இன்று ஏசி அறையில் வேலையே செய்யாமல், கதை பேசிக் கொண்டு, பல ஆயிரங்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கிஇருக்கிறது. ஒயிட் காலர் ஜாப் எனப்படும் உடலில் துõசிபடாத வேலைகளை செய்ய மனம் விரும்புகிறது. அதிகம் படித்து, பெரிய பணியில் இருப்பவர்கள் கூட, நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி தன் வீட்டு தோட்டத்தில் மண்வெட்டி காய்கறிகள் பயிரிடலாம். அல்லது ஏதேனும் உடல் உழைப்புக்கான பணியைச் செய்யலாம். பைபிளின் இன்னொரு வசனம் மிக அருமையாக, “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது, என்கிறது. அது மட்டுமல்ல. “செய்யும் வேலையை ஒழுங்காகச் செய்து தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும், என்று சொல்லும் பைபிள், “சோம்பேறிகளே! எறும்பைப் பாருங்கள். அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவர் ஆகுங்கள், என கடுமையாக இடித்துரைக்கிறது. படித்திருந்தாலும் பெற்றவர்களுக்கு பாரமாக இராமல், கிடைத்த வேலையை செய்யுங்கள். அதே தொழிலில் நீங்கள் கோடீஸ்வரர் கூட ஆகலாம்.