மனிதன் மூன்று நிலைகளில் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம். “செழிப்பில் நடுநிலைமை எத்தனை சிறப்பானது, வறுமையில் நடுநிலைமை எத்தனை சிறப்பானது, வணக்கத்தில் நடுநிலைமை எத்தனை சிறப்பானது, என்பதே அவர் உதிர்த்த பொன்மொழிகள். பணம் கொட்டிக் கிடக்கும் நேரத்தில், எதையும் சாதிக்கலாம் என்ற ஆணவத்துடன் மனிதன் காரியங்களை செய்கிறான். அப்படி இல்லாமல் பணக்காரர்கள், எவருக்கு நீதி சொன்னாலும், என்ன உதவி செய்தாலும், எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது. அதுபோல் வறுமை வந்த காலத்திலும், நீதிக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடாமல், கஷ்டங்களை இன்முகத்துடன் தாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு வணக்கம் தெரிவிக்கும் போது, ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, அனைவருக்கும் பணிவுகாட்டி இன்முகத்துடன் வணங்க வேண்டும். நபிகள் நாயகம் இக்கருத்துக்களை மக்கள் மத்தியில் வலியுறுத்தியது எக்காலத்துக்கும் பொருந்தும்.