சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே பொன்னடப்பட்டி முத்து விநாயகர், மந்தைக்கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்த கோயிலில் ரூ.60 லட்சத்தில் திருப்பணி நடந்தது. முத்து விநாயகர் கோயிலில் ராஜகோபுரம், மகாவிஷ்ணு, துர்க்கை, தெட்சிணாமுர்த்தி சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. ஆக.,18 ல் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு கோ, கஜ, அசுவ பூஜைகள் நடந்தன. காலை 10:30 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் உற்றப்பட்டது. தொடர்ந்து பகல் 11:20 மணிக்கு மந்தைக்கருப்பர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, கிராமமக்கள் செய்தனர்.