பதிவு செய்த நாள்
22
ஆக
2016
12:08
மேட்டூர்: மேட்டூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பெண்கள், நேற்று, பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். மேட்டூர், மின்வாரிய குடியிருப்பு அருகே, ஆதிபராசக்தி கோவில் உள்ளது. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், மேட்டூர், பொன்னகரில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள், நேற்று, பால்குடத்துடன் பஸ் ஸ்டாண்ட், மரியன்னை பள்ளி வழியாக கோவிலை அடைந்தனர். அங்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.