கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ளது தொட்டமளூர். இங்குள்ள திருக்கோயிலில் நவநீத கிருஷ்ணன் தவழும் நிலையில் குடிகொண்டிருக்கும் சன்னிதி தனியாக உள்ளது. இப்படிப்பட்ட அமைப்பில் வேறு எங்கும் விக்கிரகம் இல்லை என்கின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டினால், குழந்தை பாக்கியம் நிச்சயம்! என்பது பக்தர்களது நம்பிக்கை.