உடுப்பியில் அமைந்துள்ள கிருஷ்ணர் விக்கிரகம் சாளக்கிராமத்தினால் ஆனது. துவாரகையில் ருக்மணிதேவியால் பூஜிக்கப்பட்ட இந்த விக்கிரகம் மத்வாச்சார்யரால் உடுப்பியில் பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொண்டால் விரைவிலேயே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
சென்னை திருநின்றவூர் அருகேயுள்ள புலியூர் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயிலில், ஆனி உத்திரத்தன்று ஸ்வாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, கல்யாண வரம் பிரார்த்திக்கும் கன்னிப் பெண்களுக்கு தாலிச் சரடும், குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு எலுமிச்சம் பழமும் வழங்கப்படுகின்றன. அவற்றை வீட்டில் வைத்து, இறைவழிபாடு செய்து வந்தால், விரைவில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.