நாமக்கல் குகைக்கோயிலில் சிவன் பாதி, விஷ்ணு பாதியாக காட்சியளிக்கும் ஈஸ்வரன், நாகத்தைக் கையில் ஏந்தியபடி அபூர்வ கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அற்புதமான ஸ்தலம். திருக்கொடுங்குன்றம் என்பது இதன் தேவாரப் பெயர். இந்த மலையின் உச்சியில் மருதுபாண்டியர் காலத்துக் கோட்டையும் அதில் பீரங்கியும் உள்ளன. வள்ளல் பாரி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி இது. அவன் முல்லைக்குத் தேர் கொடுத்த இடம் இவ்வூரிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.