பொதுவாக சிவன்கோயில்களில் அருள்மிகு நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் காட்சியளிப்பர். ஆனால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில், நடராஜ பெருமான் ஜுரதேவருடன் இருக்கிறார். மயில் வடிவம் எடுத்து சிவன் நடனம் ஆடியதால் இங்குள்ள நடராஜரை மயூர தாண்டவ நடராஜர் என்கிறார்கள். இக்கோயிலின் கருவறையின் கோஷ்ட சுவரில் நடராஜருக்கு அருகில் மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார் ஜுரதேவர்.