திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டு, பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்த திரிவிக்கிரமனாக அவதாரம் செய்த கோலத்தை 108 திவ்விய தேசங்களில் மூன்றே இடங்களில் மட்டும் தரிசிக்கலாம். முதலாவது நடுநாட்டுத் திருப்பதியான திருக்கோவிலூர் இங்கு திருவடியை உயரே தூக்கி நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டாவது தொண்டை நாட்டுத் திருப்பதியான காஞ்சியிலுள்ள திருஊரகம் எனப்படும் உலகளந்த பெருமாள் கோயில் ஆகும். மூன்றாவது சோழ நாட்டுத் திருப்பதியான சீர்காழி, காழிச்சீராம விண்ணகரம், இங்கு பெருமாள் தாடளன், திருவிக்கிரமன் என்ற நாமம் கொண்டுள்ளார்.