சென்னை திருவொற்றியூர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இங்குள்ள தியாகராஜர் கோயிலில், பாம்பரசர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கருவறையில் அருளும் சிவபெருமான் வாசுகி என்ற பாம்பை தன் மேனியில் கொண்டிருப்பதால், படம்பக்க நாதர் என்று அழைக்கப்படுகிறார். ஆதிசேஷனும் இந்தத் தலத்தில் ஆயிரம் லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளான். இந்த கோயிலில் உள்ள சகஸ்ரலிங்கத்தைத் தரிசித்து வழிபடுவதால், சிவனருள் கைகூடும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.