நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் என்ற கிராமத்தில் பிரசித்திப்பெற்ற முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் தீராத பிணிகள் விலகவும், தொழில் அபிவிருத்தி அடையவும் முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். அவர்களது கோரிக்கை நிறைவேறினால், உருவச்சிலைகளை செய்து காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் பலவகை சிலைகளைக் காணலாம்.