நாகப்பட்டினத்திலுள்ள நீலமேகப் பெருமாள் கோயிலின் ரங்கநாதர் சன்னிதியில் மிகவும் அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மரைத் தரிசிக்கலாம், ஐம்பொன்னால் ஆன இந்த மூர்த்தியின் விக்கிரகத்தில் ஒரு கரம் பிரகலாதன் தலையைத் தொட்டவாறும், மற்றொரு கரம் அபயகரமாகவும் உள்ளதுடன், எஞ்சிய ஆறு திருக்கரங்களும் இரணியனை வதம் செய்யும் நிலையில் உள்ளன.