மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் தீர்த்தக்குளமான ஹரித்ரா நதியில் ஆனி பவுர்ணமி அன்று தெப்பத்திருவிழா நடைபெறும். இக்குளத்தில் கோபாலகிருஷ்ணன் கோபியருடன் ஜலக்கிரீடை செய்ததாக ஐதீகம். கோபியர் நீராடிய போது அவர்கள் உடலில் பூசி இருந்த மஞ்சள் இக்குளத்தில் கலந்து குளத்தின் நீரினை புனிதம் அடையச் செய்ததுடன் குளத்தின் நீர் மஞ்சள் நிறமாக மாறியதால் ஹரித்ரா நதி என்று பெயர் பெற்றது. எல்லாக் காலங்களிலும் நீர் நிறைந்து காணப்படும் இக்குளம் காவேரியின் மகள் என்று சிறப்புப் பெயரையும் பெற்றது. இக்குளத்தில் 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலந்திருக்கிறதாம். இதில் ஆனி பவுர்ணமியில் நீராடினால் புண்ணியம் கிட்டுவதுடன் நோய்களும் மாயமாகும் என ஞான நூல்கள் கூறுகின்றன.