நாகை மாவட்டம், நாகை வட்டத்தில் அமைந்துள்ளது திருச்செங்காட்டங்குடி. இங்குள்ள சிவன்கோயிலில் காணும் பல அற்புதங்களில் குறிப்பிடத்தக்கவை நவதாண்டவ மூர்த்திகளின் தரிசனம். இங்கே வடசுற்று மண்டபத்தில் புஜங்கவளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவ மூர்த்தி, காலசம்ஹாரர், கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹாரர், பைரவமூர்த்தி, உத்திராபதியார் ஆகிய நவதாண்டவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.