கர்நாடகாவிலுள்ள யாத்திரை தலமான தி.நர்சீபுராவில் அகஸ்தேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் மேடை மீது குமரக் கடவுளும், விநாயகப் பெருமானும் தரிசனம் தருகிறார்கள். அவருடைய பீடத்துக்கு அடியில் ஆதிசங்கரர் எழுதிய ஓலைகள் இருக்கின்றன. பக்தர்கள் விநாயகரைத் தூக்கி வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தித்துவிட்டு கீழே வைப்பார்கள். ஆனால், காரியம் நிறைவேறும் என்றால் மட்டுமே விக்கிரகத்தைத் தூக்க முடியும் இது ஒரு அதிசயம்.