கீழக்கரை: உத்தரகோசமங்கை அருகே கதைக்குளம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலில் உலக நன்மைக்கான தன்வந்தரி ஹோமம் நடந்தது. மூலவர்களுக்கு 18 வகையான மூலிகை திருமஞ்சனம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், சாற்றுமுறை கோஷ்டி, வேத பாராயணம் பாடப்பட்டது. திருக்கோஷ்டியூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி சேகர் சுந்தரராஜன் செய்திருந்தார்.