விருதுநகர் : மீசலுார் விலக்கில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி, லட்சுமி பூஜைகளுடன் முதல்கால ஹோமம் நடந்தது. விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் இருந்து பல்லாக்கு ஊர்வலத்துடன் பால்குடம் துவங்கி கோயிலைஅடைந்தது. காலை 8 மணிக்கு சிறுமிகள் தீபஜோதி ஏந்தி எதிர்சேவை நடந்தது. காலை 10.30 மணிக்கு பகவானுக்கு ஸம்பத்ஸரா அபிஷேகம் நடந்தது. பின் மஹாதீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தன.