பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
கீழக்கரை, : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில், வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு கடந்த ஆக., 29,30,31 ஆகிய மூன்று நாட்கள் ஆவணி பவித்ர உற்சவம் கோலாகலமாக நடந்தது. கோயிலில் உள்ள உற்சவர், மூலவர்களுக்கு ஓராண்டு முழுவதும் செய்யக்கூடிய பூஜைமுறைகளில், சிறு பிழைகள், குற்றம் இருப்பினும், அவற்றினை பொறுத்தருள வேண்டிய நிவர்த்தி பூஜையாக பவித்ர உற்சவம் கருதப்படுகிறது. கல்யாண ஜெகநாதபெருமாள், பத்மாஸனித்தாயாருக்கு நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல் பாடப்பட்டு, விஷேச திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.