திருவனந்தபுரம் : கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரத்தில் ஓணம் பண்டிகையைக் கொண்டாட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கேரளாவில் அலுவலக நடவடிக்கைகளை பாதிக்கும்படி, அரசு அலுவலக வேலை நேரங்களில் ஓணம் உட்பட எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடக் கூடாது என அம்மாநில அரசின் தலைமைச் செயலர் விஜய் ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அனைத்துத் துறைகளின் தலைவர்களும், அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை வரும் 13ம் தேதி(செப்., 13) கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.