Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுற்றுச் சூழலை பாதிக்காத.. மாட்டுச் ... திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த தி.மலை ராஜகோபுர நிலைப்படி கிரேன் மூலம் மரத்தூண் நிறுத்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேதமடைந்த தி.மலை ராஜகோபுர நிலைப்படி கிரேன் மூலம் மரத்தூண் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

01 செப்
2016
11:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரத்தில் சேதமடைந்துள்ள நிலைப்படிகளை புதுப்பிக்க, ராட்சத கிரேன் மூலம் மரத்துாண் நிலைப்படியில் நிலைநிறுத்தும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள், 25 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கின்றன. இதற்காக, 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. ராஜகோபுரத்தில், மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள நான்காவது துாணின் மேற்கூரையில், 10 டன் எடை கொண்ட பீமில், 4 அடி துாரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்ய, சென்னை, ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் ஆய்வக உதவி பேராசிரியர், அருண் மேனன் கடந்த, 27ம் தேதி ஆய்வு செய்தார். கோபுரத்தின் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஒட்டி சீர்செய்ய வேண்டும் என, பரிந்துரைத்தார். மேலும், கோபுரத்தின், 13 நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தேக்கு மரத்திலான படிகள் சேதமடைந்துள்ளன; இதை புதுப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். அதன்படி, நிலைப்படிகளில் இலுப்பை மரத்திலான நிலைப்படி தயார் செய்து, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. இதை நிலைநிறுத்த, 217 அடி உயரமுள்ள கோபுரத்தில், ராட்சத கிரேன் மூலம் மரம் நிலைப்படியில் நிலைநிறுத்தும் பணி நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar