பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
செய்யூர் : போலீஸ் ரோந்து இல்லாத எல்லையம்மன் கோவில், ஓதியூர் போன்ற கிராமங்களில், பாக்கெட் சாராயம், புதுச்சேரி மது விற்பனை அமோகமாக நடக்கிறது. செய்யூர் தாலுகா, இ.சி. ஆர்., சாலையை ஒட்டிய, எல்லையம்மன் கோவில், ஓதியூர் கிராமங்கள், மா, முந்திரி, பலா, தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில், பாக்கெட் சாராயம் அமோகமாக விற்கப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய போலீஸ் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என, கூறப்படுகிறது. இதனால், சமூக விரத செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த கிராமங்களை போலீசார் கண்காணித்து, முறைகேடான மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.