பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
திருத்தணி: மாவட்டத்தில், மர்ம காய்ச்சல் எதிரொலியால், திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நேற்று முதல் நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. திருத்தணி வட்டத்தில், மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் பரவாமல் இருக்க, ஒன்றிய, நகராட்சி நிர்வாகம் சார்பில், சுகாதார பணிகள் மற்றும் நிலவேம்பு கஷாயம் வினியோகம் நடைபெறுகிறது.இந்நிலையில், திருத்தணி முருகன் மலைக் கோவிலில் இயங்கிவரும் சித்த மருத்துவமனை சார்பில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை முன்னிட்டு, நிலவேம்பு கஷாயம் நேற்று முதல், வழங்கப்படுகிறது.காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை தினந்தோறும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.