செத்தவரை கணபதி கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2016 11:09
செஞ்சி: செத்தவரை கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் 5ம் தேதி நடக்கிறது. செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தில் உள்ள கணபதி ÷ காவில் திருப்பணிகள் செய்துள்ளனர். இக்கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, வரும் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு மங்கள இசையும், 6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும், இரவு 8:00 மணிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் செத்தவரை சிவ ஜோதி மோன சித்தர் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை செத்தவரை கிராம மக்கள் செய்துள்ளனர்.