பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சேரன் காலனி மகா கணபதி கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 30ம் தேதி மகா கணபதி கோவிலிலிருந்து கொடுமுடிக்கு தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல் நிகழ்ச்சியும், 31ம் தேதி மாலை 4:00 மணிக்கு கருப்பராயன் கோவிலிலிருந்து சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு மூன்றாம் ஆண்டு விழா வேள்வி பூஜை, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், கலசஸ்தாபனம், கணபதி ேஹாமம், அஸ்திரா ேஹாமம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.