மகாபாரதத்தை வேத வியாசர் சொல்லச் சொல்ல அதனை விநாயகர் எழுதுவாக ஒப்புக் கொண்டார். வேத வியாசர் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா? எந்தக் காரணம் கொண்டும் தான் சொன்னதை மறுமுறை சொல்லமாட்டேன் என்றும், இடையினில் வேறு எந்தக் காரணம் கொண்டும் எழுதாமல் தாமதிக்கக்கூடாது என்றும் இரு நிபந்தனைகளை விதித்தார். கணபதியும் ஒப்புக்கொள்ள மகாபாரதக் காவியம் உருவாகத் தொடங்கியது. மகரிஷி அயராமல் சொல்லச் சொல்ல விநாயகர் அதனை ரசித்தவாறே எழுதிக் குவித்தார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி மிகவும் தேய்ந்துவிட்டது. ஆனாலும் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை கஜானனர். தனது கூரிய கொம்பை (தந்தத்தை) அப்படியே உடைத்தெடுத்து எழுதத் தொடங்கினார். அவரது இந்தச் செயல் கண்டு வியாசர் மெய்மறந்து கணேசரைப் போற்றித் துதித்து வழிப்பட்டார். விநாயகரும் இந்த உலகம் உள்ள அளவும் இந்தக் காவியம் நீங்காப் புகழைக் கொண்டிருக்கும் என ஆசிர்வதித்தார்.